பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதற்காக அந்நாட்டின் முதல் தர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஆசிப் அஃப்ரிடிக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
36 வயதான அப்ரிடி 2022 பாகிஸ்தான் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த கைபர் பக்துன்க்வா அணிக்காக விளையாடியுள்ளார்.
அதன்படி, செப்டம்பர் 12, 2022 அன்று விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை அன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும்.
அஃப்ரிடியின் குற்றத்தின் சரியான தன்மையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பகிரங்கப்படுத்தவில்லை.
ஆனால் இந்த குற்றத்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அவரது குற்ற ஒப்புதல், வருத்தம் மற்றும் கடந்த கால பதிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.