யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி பிரித்தானியா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரச விமானப்படைக்கு சொந்தமான C17 விமானத்தில் உக்ரைன் ஜனாதிபதி வடக்கு லண்டனில் உள்ள ளுவயளெவநன விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் யுக்ரைன் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, விளாடிமிர் செலென்ஸ்கி யுக்ரைனில் இருந்து வெளியே வருவது வருவது இதுவே முதல்முறை என்பது விசேடம்சமாகும்
மேலும் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு செலென்ஸ்கி பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
இந்த திடீர் குறுகிய விஜயத்தின் போது, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரித்தானிய மன்னர் இரண்டாம் சார்லஸை சந்திக்கவும் யுக்ரைன் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவரது அவசர விஜயத்தின் போது, அவர் பிரித்தானிய பாராளுமன்றத்திலும் உரையாற்ற உள்ளார்.
அத்துடன், அவர் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் ஆகியோரை சந்தித்துள்ளார்.