Sunday, May 31, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்

விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்

க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவுகளை அதிகரிப்பது மற்றும் நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பில் நிதி அமைச்சுடன் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தொகையை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு கொள்கை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்தாலோசித்து கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகள் தாமதமானால் அது பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கும் எனவும், எனவே பிள்ளைகளின் நலன் கருதி விரைவில் பெறுபேறுகளை வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles