முத்திரைகளின் விலை அதிகரித்துள்ள போதிலும் முத்திரைகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முத்திரை விற்பனை மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டு (2022) ஒகஸ்ட் முதல் டிசம்பர் 31 வரை 742 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக பதில் தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கடிதம் அனுப்புவதில் சில குறைபாடுகள் இருந்தாலும் பதிவுத் தபால் அனுப்புவதில் குறை இல்லை என்றார்.
தகவல் தொழில்நுட்பத்துடன் தபால் திணைக்களம் முன்னோக்கி நகர்ந்து வருவதாகவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.