Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயிர் சேதம் தொடர்பில் கமநல சேவை நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பயிர் சேதம் தொடர்பில் கமநல சேவை நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

விவசாய அமைச்சுக்கு விவசாயிகள் வழங்கிய அறிக்கையின்படி, மழையினால் சில பிரதேசங்களில் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

உரிய கவனம் செலுத்தி பயிர் சேத அறிக்கைகளை உரிய விவசாயிகளிடம் சேகரிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மழையினால் நெற் செய்கைக்கு சேதம் ஏற்பட்டு இருப்பின் அது தொடர்பில் அந்தந்த மாவட்டங்களிலுள்ள கமநல சேவை நிலையங்களுக்கு விரைவில் அறிவிக்குமாறு விவசாய மற்றும கமநல நிலையம் விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளது.

நெற் செய்கையின் போது பயிர் சேதம் ஏற்பட்டால் அரசின் நடவடிக்கை மூலம் காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்குகிறது. இதற்கு அமைய ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா மற்றும் ஒரு ஹெக்டேருக்கு 100,000 வழங்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles