Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுருக்கி நிலநடுக்கம்: 15 இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

துருக்கி நிலநடுக்கம்: 15 இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அண்டிய பகுதியில் இருந்த 15 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், துருக்கியில் உள்ள தமது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறியவும், அவர்கள் தொடர்பான தகவல்களை அறிய விசேட இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தகவல் பெற வேண்டியவர்கள் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்டுள்ள 009 03 124 271 032, 009 05 344 569 498 ஆகிய இரண்டு அவசர எண்கள் ஊடாக தொடர்புகொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles