Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு55 திட்ட அலுவலகங்களை மூட அரசு தீர்மானம்

55 திட்ட அலுவலகங்களை மூட அரசு தீர்மானம்

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.

திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .

முன்னாள் அமைச்சின் செயலாளர் எச்.டி. கமல் பத்மசிறி தலைமையில் ஜனாதிபதியினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 32 திட்ட அலுவலகங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

46 திட்ட அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களின் கீழ் இயங்க வேண்டும் என்றும் இது தொடர்பான குழு அறிக்கை பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய 55 அலுவலகங்களும் மூடப்படுமா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

இதன்படி குழு அறிக்கை எதிர்காலத்தில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்படும்.

பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்காக பல திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட மேலாண்மை அலகுகள் நிறுவப்பட்டுள்ளன.

அந்த அலுவலகங்களில் ஆலோசகர்கள் உட்பட பாரியளவிலான ஊழியர்கள் உயர் சம்பள மட்டங்களுக்கு அமைய உள்வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் பெரிய திட்ட அலுவலகங்களை பராமரிக்க முடியாத நிலையில், குழுவொன்றை நியமித்து அந்த திட்ட அலுவலகங்களை மதிப்பீடு செய்ய ஜனாதிபதி அண்மையில் தீர்மானித்திருந்தார் குறிப்பிடத்தக்கது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles