உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கு அவசியமான ஒதுக்கத்தை கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
உரிய பதில் அளிக்காவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நிதியமைச்சின் பதிலுக்காக தொடர்ந்தும் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வாக்களிப்புக்கான முதல் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு அவசியமான 77 கோடி ரூபா கோரி தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் நிதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.