Friday, February 13, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா?

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா?

நுகேகொட தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் சவீந்திர கமகே தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இராஜினாமா கடிதத்தை இன்று (06) அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தில் இடம்பெற்று வரும் மோசடி மற்றும் ஊழலை முற்றாக நிறுத்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளை தாங்கிக்கொள்ள முடியாத ஊழியர்கள் குழுவொன்று தம்மை இந்த பதவியில் இருந்து நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த குழுவின் பலத்த செல்வாக்கு காரணமாக தன்னால் எதுவும் செய்ய முடியாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நிறுவனத்திற்கும் சேவைகளைப் பெற வரும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்ததாக அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles