நாட்டின் நிலையற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்வைக்கும் நியாயமற்ற மற்றும் தன்னிச்சையான வரி விதிப்பினால் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், இந்த வரி முறையில் 6 சதவீதம் முதல் 36 சதவீதம் வரையான தொழில் வல்லுநர்களிடம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்துக்கான மருந்துகள் இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.