பிலியந்தலை மிரிஸ்வத்த சந்தி பகுதியில் பேருந்தில் மோதி வயோதிப பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிலியந்தலையில் இருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த சர்வதேச பாடசாலைக்கு சொந்தமான சொகுசு பேருந்து, வீட்டுக்கு முன்பாக பூ பறிப்பதற்காக சென்ற பெண் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி கவனக்குறைவாக பேருந்தை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேருந:து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.