வங்கி கடன்களை மீளமைப்பு செய்யுமாறு வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அரச பணியாளர்கள் உள்ளிட்ட பணிப்புரியும் பிரிவினரும், சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாளர்களும் வங்கிகளில் பெற்றுக் கொண்ட கடன்களையே இவ்வாறு மீளமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கடன்களுக்கான வட்டி வீதம் அதிகமாக இருப்பதுடன், தற்போது அவர்களது வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய வரி மட்டமும் உயர்ந்துள்ளதால், அவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு வங்கிகள் வழங்கிய கடன்களை மறுசீரமைப்பதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.