நகரங்களுக்கிடையிலான, நீண்ட தூர சேவைகள் மற்றும் விசேட அதிவேக புகையிரத கட்டணங்கள் புதன் (23) நள்ளிரவு முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிகரிக்கப்பட்டுள்ளது.
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைத் தெரிவித்தார்.
சில புகையிரதங்கள் 60 வீதத்தாலும், சில புகையிரதங்கள் 50 வீதத்தாலும் கட்டணத்தை அதிகரித்துள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை தொழிற்சங்கம் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
புகையிரத நிலைய அதிபர்களுக்கு அறிவிக்காமல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பயணக் கட்டணத்தை அதிகரித்துள்ளது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது பொருத்தமற்றது எனவும் சாதாரண மற்றும் சீசன் டிக்கெட் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.