Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலுக்கு செலவழித்தால், அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி கொடுப்பனவு தாமதமாகலாம்

தேர்தலுக்கு செலவழித்தால், அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி கொடுப்பனவு தாமதமாகலாம்

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, நாட்டுக்கு தேவையான பணத்தை, நிதி அமைச்சு மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் முகாமைசெய்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் அல்லது வேறு செலவுகளுக்கு பணம் செலவழித்தால், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலன்புரி சலுகைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பொதுமக்களின் செலவினங்களுக்குத் தேவையான பணத்தை வழங்குவதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஏனைய அனைத்து அமைச்சுக்களின் செலவுகளை நிர்வகிப்பதுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் செலவுகளை நிர்வகிப்பது தொடர்பாக சில தரப்பினர் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles