Monday, June 15, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதந்தையும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு

தந்தையும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு

அரநாயக்க, கொடிகமுவ பிரதேசத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கருதப்படும் தந்தையின் சடலமும் அதற்கு அருகிலிருந்து இரு சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கருதப்படும் நபர் 33 வயதான ஒருவரெனவும், ஏனைய சிறுவர்கள் இருவரும் 6 மற்றும் 9 வயதுடைய அவரின் பிள்ளைகள் என்றும் தெரியவந்துள்ளது.

சிறுவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்கள் இருவரையும் கொலைசெய்த பின்னர் அவர்களின் தந்தை உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles