Thursday, September 4, 2025
30.6 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கியில் பாரிய நிலநடுக்கம் - 10 பேர் பலி

துருக்கியில் பாரிய நிலநடுக்கம் – 10 பேர் பலி

துருக்கியின் தென் பகுதியில் உள்ள கெசிண்டெப் அருகே 7.8 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (6) அதிகாலை ஏற்பட்ட இந்த நில அதிர்வு சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், லெபனான், சிரியா உள்ளிட்ட பல நாடுகளில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் 18 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஏற்பட்ட மற்றொரு நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.7 மெக்னிடியூட்டாக பதிவானது

இது நிலத்துக்கு கீழாக 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles