Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடு

அரச ஊழியர்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடு

அரச அதிகாரிகளின் எரிபொருள் கொடுப்பனவை அவர்கள் கொள்வனவு செய்யும் லீட்டர் அளவுக்கு ஏற்ப மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அனைத்து சேவைகளிலும் தரம் I அதிகாரிகளுக்கு எரிபொருள் கொடுப்பனவாக அதிகபட்சம் 225 லீட்டரும் குறைந்தபட்சம் 115 லீட்டரும் வழங்கப்படுகிறது.

ஆனால் Q.R. குறியீட்டின் படி, இந்த அதிகாரிகள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்தில் பெறக்கூடிய அதிகபட்ச எரிபொருள் 80 லீட்டர் மட்டுமே.

அதன்படி, இந்த அதிகாரிகள் 35 முதல் 155 லீட்டர் எரிபொருளுக்கான கொடுப்பனவை, எரிபொருள் கொள்வனவு செய்யாமலேயே பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் எரிபொருளை பயன்படுத்தாமலேயே அவர்கள் பெறுகின்ற எரிபொருளுக்கான கொடுப்பனவை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles