Monday, September 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை பொலிஸுக்கு வாகனங்களை வழங்கிய ஜப்பான்

இலங்கை பொலிஸுக்கு வாகனங்களை வழங்கிய ஜப்பான்

150 மோட்டார் சைக்கிள்கள், 74 கார்கள் மற்றும் 115 தேடுதல் உபகரணங்கள் என்பன ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி சியுன்சுகேவினால் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் ஜப்பானிய அரசாங்கத்தினால் இவை கையளிக்கப்பட்டன.

இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் இந்த விபரங்கள் வெளியாக்கப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் மானியமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles