அரச துறைகளுக்கான வரி அறவீடுகளை திருத்தியமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
புதிய வரி விதிப்புகள் தொடர்பில் சில தொழிற்துறையினர் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, அதிகளவான வரி விதிப்பு காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றன.
இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்திவதுவதாக அரசாங்கத் தரப்புகளில் பேசப்படுகிறது.
இதேவேளை வரி விதிப்பு தொடர்பில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்காலத்தில் வரி திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்ற கருத்தை மறைமுகமாக குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.