Sunday, May 31, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய நடவடிக்கை

முட்டை இறக்குமதி தொடர்பில் இந்திய விநியோகஸ்தர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் நேற்று (04) பெற்றுக்கொள்ளப் படவுள்ளதாக அரச வர்த்தக பல்வேறு நியதிசார் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும் என அவர் கூறினார்.

கேள்வி மனு நடைமுறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரண்டு இந்திய விநியோகஸ்தர்களுக்கும் இன்றைய தினத்துக்குள் உரிய அறிக்கைகளை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டார்.

அதன்படி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தவுடன், முட்டை இறக்குமதி செய்யும் பணி உடனடியாகத் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles