Friday, January 30, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சரின் சாரதி கொலை:  சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

அமைச்சரின் சாரதி கொலை:  சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கெஸ்பேவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தெஹிவளை, களுபோவில, கல்கிசை மற்றும் மாவித்தர ஆகிய பிரதேசங்களில் வைத்து சந்தேக நபர்களான ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் (46), தந்தை (52) மற்றும் இரு மகன்கள் (21,25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்துக்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கத்தி மற்றும் உடைந்த கண்ணாடி போத்தலின் பாகங்களையும் காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக செலுத்திய சந்தேக நபரை, அணுகி வேகத்தை குறைக்குமாறு குறித்த சாரதி கூறியமையே இந்த கொலைக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles