Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமூகப் பாதுகாப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 18 மில்லியன் யூரோக்கள்

சமூகப் பாதுகாப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 18 மில்லியன் யூரோக்கள்

இலங்கையில் சமூக பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்கு 18 மில்லியன் யூரோக்களை வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவு பிராந்தியம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த கலந்துரையாடலில், சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையை பேணுகின்ற அதேவேளை, இவ்வாறான நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதை வினைத்திறனாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பின் தலைவர், ஜென்னி கொரியா நுனேசா, ஐரோப்பிய ஒன்றியம் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும், அதற்கேற்ப, சமூக பாதுகாப்பு அமைப்பின் தற்போதைய தேவைகளை அடையாளம் கண்டு நிவாரணத்திற்கு தகுதியான தரப்பினரை ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles