பனாமா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்மிவெவ சரணாலய பகுதியில் நான்கு இடங்களில் 14 ஏக்கர் கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சாஸ்த்ரவெல முகாமின் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, விசேட அதிரடிப்படையினர் அறுகம்பே முகாம் மற்றும் பானம பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
07 முதல் 10 அடி உயரம் கொண்ட சுமார் 140இ000 கஞ்சா செடிகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவை மேலதிக விசாரணைக்காக பனாமா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
20 கஞ்சா மரங்கள் மாதிரிகளாக எடுக்கப்பட்டு எஞ்சியவை எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
