Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுதலை வாயில் சிக்கிய தூண்டிலை அகற்றிய நபர்

முதலை வாயில் சிக்கிய தூண்டிலை அகற்றிய நபர்

யாரோ வைத்த தூண்டில் ஒன்றை விழுங்கி மிகுந்த சிரமத்திற்கு உள்ளான 13 அடி நீள முதலையின் வாயில் சிக்கியிருந்த தூண்டிலை ஒருவர் அகற்றியுள்ளார்.

களுத்துறை பகுதியைச் சேர்ந்த உதார சஞ்சீவ (40) என்பவரே இந்த நற்செயலை புரிந்துள்ளார்.

பொல்கொட ஆற்றின் கிளையொன்றில் யாரோ வைத்த தூண்டிலை விழுங்கிய முதலை ஒன்று இருப்பதாக பிரதேசவாசிகள் மத்தியில் வாய்த்தகவல் பரவியதையடுத்து, அவ்விடத்திற்கு சென்ற உதார சஞ்சீவ, அங்குள்ள மற்றவர்களின் உதவியுடன் முதலையை கரைக்கு கொண்டு வந்துள்ளார்.

பின்னர் முதலையை வசதியான இடத்திற்கு அழைத்துச் சென்று முதலையின் வாயை பத்திரமாக திறந்து மோட்டார் சைக்கிள் கேபிளின் உதவியுடன் பொருத்தப்பட்டிருந்த கோழி கொக்கி மூலம் தூண்டிலை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின் குறித்த தூண்டிலை அகற்ற முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles