எல்பிட்டி – ஓமந்தை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
70 மற்றும் 86 வயதான பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.