இந்திய தொழில்முனைவோர் குழு இலங்கையின் மத சுற்றுலாவை மேம்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இந்த இந்திய தொழில் முயற்சியாளர்களுக்கும் இடையில் இன்று (31) காலை பொது நிர்வாக அமைச்சில் இடம்பெற்றது.
இமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களான ராவண எலிய, நுவரெலியா, சீதா எலிய உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்ய விரும்பும் சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்களுக்காக முதலீடு செய்ய இந்திய தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.