புத்தாண்டுக்கு முன்னர் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று (23) பாராளுமன்றில் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை 1000/- வரையில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பண்டிகைக் காலத்தில் அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.