Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்

மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இன்று(31) கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வங்காளவிரிகுடாவின் தென் கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை(01) கிழக்கு கடற்பிராந்தியத்தை அண்மிக்கவுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்வதுடன் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் அநேகமான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பொத்துவில் தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை முதல் மன்னார் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles