நாட்டில் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த உத்தரவு குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (22) காலை நாடாளுமன்றுக்கு அறிவித்தார்.
பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 12ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.