Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் அதிகம் சம்பாதிக்கும் யூடியூப் செனலானது 'அபே அம்மா'

இலங்கையில் அதிகம் சம்பாதிக்கும் யூடியூப் செனலானது ‘அபே அம்மா’

பிரபல சமையல் யூடியூப் செனலான Apé Amma, அமெரிக்கக் கணக்கெடுப்பின்படி, இலங்கையிலேயே அதிக வருமானம் ஈட்டும் செனலாக உள்ளது.

இந்த செனல் தொடங்கப்பட்டதில் இருந்து 962,386 அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளதாக CashnetUSA.com தெரிவித்துள்ளது.

2.7 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன், Apé Amma சமையல் வீடியோக்கள் சராசரியாக பல இலட்சக்கணக்கான பார்வைகளை கொண்டுள்ளது.

சர்வதேச ரீதியில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, Cocomelon யூடியூப் சேனல் உலகில் அதிகம் பார்க்கப்படும், அதிகம் வருமானம் ஈட்டும் யூடியூப் சேனலலாக இடம்பிடித்துள்ளது.

2006 இல் உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் வீடியோக்களில் இருந்து $282.8m திரட்டப்பட்டதன் மூலம், குழந்தைகளுக்கான சேனல் Cocomelon எல்லா காலத்திலும் அதிக வருமானம் ஈட்டும் YouTube சேனலாகவுள்ளது.

குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட இந்த சேனல் 5 கண்டங்களில் அதிக லாபம் ஈட்டும் சேனலாக தெரிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles