நாட்டுக்குத் தேவையான டின் மீன்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாக டெஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், டின் மீன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவருமான ஷிரான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை முதன்முறையாக டின் மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இலங்கையின் நாளாந்தடின் மீன்களின் தேவை சுமார் இரண்டரை இலட்சம் எனவும், ஆனால் தற்போது உள்ளூர் தொழிற்சாலைகள் நாளொன்றுக்கு மூன்று இலட்சத்திற்கும் அதிகமான டின் மீன்களை உற்பத்தி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
டின் மீன் உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ள நிலையில் டின் மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.