Friday, September 19, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவங்குரோத்து தேசம் என்ற முத்திரை விரைவில் அகற்றப்படும் - அமைச்சர் மனுஷ

வங்குரோத்து தேசம் என்ற முத்திரை விரைவில் அகற்றப்படும் – அமைச்சர் மனுஷ

இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள முடியுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், இலங்கை வங்குரோத்தான தேசம் அல்ல, மீண்டும் எழுச்சி பெறும் புகழ்பெற்ற தேசம் என்று கூறினார்.

வங்குரோத்து தேசம் என்ற முத்திரை விரைவில் அகற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடனை அடைக்க ஆரம்பிப்பதன் மூலம் புதிய முதலீடுகளை கொண்டு வரலாம், அதனூடாக வேதனங்கள் அதிகரிக்கும் என்று கூறிய அமைச்சர், எதிர்காலத்தில் வரி, வங்கி வட்டி வீதங்களும் குறையலாம் என்றார்.

மேலும், பலர் இந்த முன்னேற்றத்தை ஏற்கவில்லை, எனவே நாசவேலையில் ஈடுபடுகிறார்கள் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles