Friday, September 19, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவளர்ப்பு நாய்க்குட்டியை மீட்க கிணற்றுக்குள் இறங்கிய இளைஞர் சடலமாக மீட்பு

வளர்ப்பு நாய்க்குட்டியை மீட்க கிணற்றுக்குள் இறங்கிய இளைஞர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி – உதயநகர் பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிணற்றுக்குள் வீழ்ந்த வளர்ப்பு நாய்க்குட்டியை பாதுகாக்க சென்ற போதே குறித்த இளைஞர் இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த தனது வளர்ப்பு நாய்க்குட்டி குறித்த கிணற்றில் விழுவதை இளைஞன் அவதானித்துள்ளார்.

இந்நிலையில், அதனை காப்பாற்றும் நோக்கில் குறித்த இளைஞன் ஒரு கயிற்றை கட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.

எனினும் கயிறு அறுந்ததையடுத்து அவர் கிணற்றுக்குள் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கால்கள் சகதிக்குள் சிக்கியதால் அவரால் நீந்த முடியாமல் போயிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இளைஞனை மீட்க பிரதேசவாசிகள் முயற்சித்த போதும், அவர் சடலமாகவே மீட்கப்பட்டார்.

நாய்க்குட்டி உயிருடன் மீட்கப்பட்டதுடன், 24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles