Wednesday, May 21, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போது நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதனால் எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கப்படுமா? அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரிகுறைப்பு எதுவும் மேற்கொள்ளப்படுமா? என்பது தொடர்பாக எதிரணியினர் இன்று (23) நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் வழங்கிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, தற்போதைய சூழ்நிலையில் வாகன இறக்குமதிக்கான அனுமதியை வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

நாட்டில் கையிருப்பில் உள்ள வெளிநாட்டு ஒதுக்கம் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கான பயன்படுத்தப்படுவதாகவும், தற்போதைய நிலைமை சீரடைந்ததன் பின்னர் வாகன இறக்குமதி குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles