Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட 22 வயது இளைஞர் கைது

ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட 22 வயது இளைஞர் கைது

குருணாகல் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஏ.டி.எம் அட்டை மோசடி தொடர்பில் 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொட்டிகாபால பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நேற்று 6 வங்கி அட்டைகளுடன் குருணாகலில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி அவர்களின் பின் இலக்கங்களைப் பெற்று வங்கி அட்டைகளை மாற்றிக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் இந்த தகவலை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துள்ளார்.

சந்தேக நபரை இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles