யுக்ரைன் மீது ரஷ்யா இன்று 28 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன்போது, அவரிடம் அணு ஆயுதம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது.
ரஷ்யா என்ற நாடு இந்த உலகத்தில் இருக்குமா? இருக்காதா? என்ற உயர்ந்தபட்ச அச்சுறுத்தல் ஏற்படுமாயின்இ அணு ஆயுதத்தை நாங்கள் பயன்படுத்துவோம் என்றார்.