Monday, June 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயின் - கூரிய ஆயுதங்களுடன் 'டிஸ்கோ' கைது

ஹெரோயின் – கூரிய ஆயுதங்களுடன் ‘டிஸ்கோ’ கைது

‘டிஸ்கோ’ என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய குறித்த பெண்ணிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தற்போது பிரான்சில் வெளிநாட்டில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ரூபன்’ உடன் நேரடி தொடர்பில் இருப்பதும் இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த பெண் நேற்று (29) முகத்துவவாரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles