Wednesday, August 27, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்வெட்டை இடைநிறுத்தவில்லை - மின்சார சபை

மின்வெட்டை இடைநிறுத்தவில்லை – மின்சார சபை

மின்வெட்டை இடைநிறுத்தவில்லை என்றும் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க மின்சார சபை இணங்கவில்லை என்றும் அதன் தலைவர் நளிந்த இளங்ககோன் இன்று (26) பிற்பகல் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்சாரத்தை வழங்க, 410 கோடி ரூபா (எரிபொருள் கொள்வனவு) தேவைப்படுகிறது.

மின்வெட்டு இடைநிறுத்தப்படுவதாக தாம் அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பரீட்சை நடைபெறும் பிற்பகல் வேளையில் மின்வெட்டு இல்லை எனவும், அப்படி அமுலானால் அது வேறொரு காரணத்தால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், பரீட்சை நடைபெறும் நேரத்தை தவிர்த்து இரவு நேரத்தில் மின்வெட்டு அமுலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருளின்றி மின்சாரம் வழங்க முடியாது எனவும், எனவே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை வழங்க இணங்கினால் மின்சாரத்தை வழங்க முடியும் எனவும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பில் மின்சார சபையை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மின்சார சபை அதிகாரிகளும் கலந்து கொண்டதாக தெரிவித்த தலைவர், மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என்பதை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles