பிலியந்தலை கொழும்பு வீதியின் ஜாலியகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொல்பாகொட யக்கலமுல்ல பிரதேசத்தாய் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பிலியந்தலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் கெஸ்பேவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி முச்சக்கரவண்டியால் வேரஹெர கொத்தலாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.