Wednesday, August 27, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் தேர்தல் ஆணைக்குழு பணிகள் முடங்காது!

உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் தேர்தல் ஆணைக்குழு பணிகள் முடங்காது!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால், ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து நேற்று (25) இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியிடம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆணைக்குழுவின் செயல்பாடுகளுக்கு மூன்று உறுப்பினர்கள் போதுமானவர்கள் என்றும், ஒருவரின் பதவி விலகலால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்டாது என அரசியலமைப்பின் உறுப்புரைகளை மேற்கோள்காட்டி மஹிந்த தேசப்பிரிய பேஸ்புக் பதிவொன்றில் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் சரத்துக்கமைய, மேற்கோள்காட்டி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரம் மூன்று உறுப்பினர்களைக் கொண்டது என்றார்.

“தலைவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கலாம்” அவர்களின் பெரும்பான்மை வாக்குகளுக்கமைய தீர்மானம் நிறைவேறும் என்று அவர் கூறினார்.

அத்துடன், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்த போதிலும், ஆணைக்குழுவிற்குச் செயற்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அரசியலமைப்பின் சரத்தை மேற்கோள் காட்டி அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles