Wednesday, August 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச வங்கியில் 20 மில்லியன் மதிப்பிலான நகைகள் மாயம்: சிஐடியில் முறைப்பாடு

அரச வங்கியில் 20 மில்லியன் மதிப்பிலான நகைகள் மாயம்: சிஐடியில் முறைப்பாடு

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகைகளை அடகு வைத்து வங்கியில் தங்கக் கடனைப் பெற்ற நபர் ஒருவர், நகைகளை மீட்பதற்கு முயற்சித்த போது நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வங்கி முகாமையாளர் தலைமை அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 12 பேர் அடகு வைத்த நகைகளும் மாயமாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

2020 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தங்கக் கடனுக்காக அடகு வைக்கப்பட்ட நகைகள் இவ்வாறு காணாமல் போனதாக சிஐடிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரச வங்கியின் முகாமையாளர் காணாமல் போன நகைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த புகாரில், நகைகள் வைக்கப்பட்டிருந்த லொக்கரின் 2 சாவிகள், வங்கி ஊழியர்கள் இருவரின் பிடியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன நகைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனி குழுவொன்றை மட்டக்களப்புக்கு அனுப்ப உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

#Mawbima

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles