Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 20 வர்த்தகர்களுக்கு அபராதம்

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 20 வர்த்தகர்களுக்கு அபராதம்

யாழ்ப்பாணம் மாநகரசபை பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் கிரமமாக ஒவ்வொரு மாதமும் யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 11ம், 12ம் திகதிகளிலும் ஜனவரி மாதம் 17ம், 18ம் திகதிகளிலும் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பலசரக்கு வர்த்தக நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது காலாவதியான , பழுதடைந்த , உரிய பொதியிடப்படாத மற்றும் வண்டு மொய்த்த உணவு பொருட்கள் என ஏராளமான மனித பாவனைக்கு உதவாத பொருட்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை நீதிமன்றில் ஒப்படைத்த பொது சுகாதார பரிசோதகர்கள் 20 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.

வழக்குகள் நேற்றையதினம் மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது கடை உரிமையாளர்கள் அனைவரும் குற்றத்தை ஏற்று கொண்டனர்.

இதனையடுத்து 20 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் மொத்தமாக 540,000 ரூபா அபராதம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles