மோட்டார் வாகன திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 மணி நேரமாகக் கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நாடளாவிய ரீதியாக வாகன வருமான வரி சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.