இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் செயலாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டிற்கான ஐந்து நாள் பயணத்தில், அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் பெப்ரவரி 3 திகதியன்று, கடல்சார் சிந்தனைக் களஞ்சியமான புவிசார் அரசியல் வரைபடத்தில் அவர் விரிவுரை ஆற்றவுள்ளார்.
பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் எதிர்வரும் முதலாம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் பெப்ரவரி 5 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளார்.