Thursday, December 11, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த வருடம் 1,325 தொழுநோயாளிகள் அடையாளம்

கடந்த வருடம் 1,325 தொழுநோயாளிகள் அடையாளம்

தொழுநோய் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை காணப்படுகின்ற போதிலும், கடந்த வருடம் 1,325 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளர்கள் பதிவாவதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

பதிவாகியுள்ள நோயாளிகளில் 10 வீதமானவர்கள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர்களில் 40 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலும் 50 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தோலின் நிறத்தை விட உடலில் சந்தேகத்திற்கிடமான புள்ளிகள் இருந்தால் அருகில் உள்ள அரச மருத்துவமனையின் தோல் நோய் மருத்துவரை அணுகுமாறு அவர் பரிந்துரைத்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles