செய்திகள்உள்நாட்டுஇன்று முதல் மின்வெட்டு இல்லை

இன்று முதல் மின்வெட்டு இல்லை

உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டை அமுலாக்குவதில்லை என நேற்று தீர்மானிக்கப்பட்டது.

பரீட்சைகள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டினை அமுலாக்காதிருக்க மின்சார சபையிடம் கோரியது.

ஆனால் அதற்கு மின்சார சபை இணங்காத நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதில் தலையீடு செய்து, இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன்படி பரீட்சைகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள நிலையில், அதுவரையில் மின்வெட்டை அமுலாக்காதிருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இன்று (26) முதல் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles