Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர் களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், அந்த மருந்துகளை வழங்க விரும்புவோர் நன்கொடைப் பிரிவின் 0777-468503 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர கோருகின்றார்.

மேலும், வயது வந்தோர் மற்றும் சிறுவர் நோயாளிகள் 800 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன என்பதை மருத்துவமனையின் நன்கொடைப் பிரிவைத் தொடர்புகொண்டு அறியலாம்.

இந்த அலகு தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திறந்திருக்கும். அனைவரும் மருத்துவமனைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அவர் மேலும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles