Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவணிகங்களுக்கு தொடர்ந்தும் கடன் நிவாரணம் வழங்கமுடியாது!

வணிகங்களுக்கு தொடர்ந்தும் கடன் நிவாரணம் வழங்கமுடியாது!

பல்வேறு துறைகளைச் சேர்ந்த வணிகங்கள் இன்னும் கடன் நிவாரணங்களை எதிர்பார்க்கும் நிலையில், வங்கித் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நடைமுறையை தொடர்ச்சியாக ஊக்குவிப்பதில்லையென மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வணிகங்கள் மீட்சியை நோக்கி நகர்வதற்கான வேறு வழிகளை ஆராய வேண்டும் என்றும், வங்கிகளில் தொடர்ந்தும் சார்ந்திருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ‘இலங்கை பொருளாதாரக் கண்ணோட்டம் 2023’ வெளியீட்டு நிகழ்வின்போது, நாட்டின் தனியார் துறை வர்த்தகத் தலைவர்களிடம் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடனை செலுத்துவதில் நிவாரணம் கேட்கும் முக்கிய துறைகளில் சுற்றுலாவும் ஒன்றாகும்.

இந்தநிலையில், சுற்றுலா துறையை மீட்டெடுப்பது சுற்றுலாவை மேம்படுத்துவதில் இருந்து வர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை பேணுவது முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் வணிகங்கள் தொடர்பில், கடன் நிவாரணம் என்ற இடைக்காலத் தடையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, முடிந்தவரை கடனை மறுசீரமைக்குமாறு மத்திய வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles