Friday, September 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையிலிருந்து தங்கம் கடத்திய பெண்கள் இருவர் சென்னையில் கைது

இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய பெண்கள் இருவர் சென்னையில் கைது

இலங்கையிலிருந்து சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திச்சென்ற 2 இலங்கை பெண்களை சுங்கத்தினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய 2 இலங்கை பெண்கள் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டனர். அத்துடன், அவர்களது உடைமைகளை சோதனை செய்யப்பட்டதுடன், பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனையிடப்பட்டனர்.

அதன்போது 2 பெண்களும் தமது ஆடையில் மறைத்து வைத்து கடத்திவந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து 25 இலட்சத்து 73 ஆயிரம் இந்திய ரூபா (சுமார் 1.1 கோடி இலங்கை ரூபா) மதிப்புள்ள 516 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குறித்த 2 பெண்களையும் கைது செய்த தமிழக சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles