Saturday, June 21, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுA/L பரீட்சை காலத்தில் மின்வெட்டு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

A/L பரீட்சை காலத்தில் மின்வெட்டு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

உயர் தர பரீட்சைக் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எனவே, இன்று காலை 10.30 மணிக்கு ஆணைக்குழுவில் நடைபெறும் விசாரணைகளில் கலந்துகொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தாம் கண்காணித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (25) மற்றும் நாளை (26) மின்வெட்டு மேலும் 20 நிமிடங்களால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பகல் நேரத்தில் ஒரு மணித்தியாலமும் இரவு நேரத்தில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles